சென்னைக்கு அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்- வானிலை ஆய்வு மையம

சென்னை, அக். 17 சென்னை மற்றும் புற­நகர் பகுதிகளில் நேற்று இரவு மித­மான மழை முதல் கன­மழை வெளுத்து வாங்கி வருகி­றது. மழை விட்­டுவிட்டு பெய்து வருவ­த­தால், சென்­னை­யில் பெரும்­பா­லான இடங்­களில் மழைநீர் தேங்­கியுள்ளது. இதற்கி­டை­யில்,சென்னை உள்­பட 4மாவட்­டங்­க­ளுக்கு அதிகன­ம­ழைக்­கானரெட் அலர்ட் எச்­ச­ரிக்கை விடுக்கப்­பட்­டுள்­ளது. இத­னால் தமி­ழக அரசு சார்பில் முன்னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை­கள் தீவிரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த நிலையில், சென்னை எழி­ல­கத்தில் உள்ள மாநில அவ­சரகால செயல்­பாட்டு மையத்திற்கு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்­டார். அப்­போது மழை நில­வ­ரம், மீட்பு நிவா­ரண நட­வ­டிக்­கை­கள் குறித்தும், செம்­ப­ரம்­பாக்கம் உள்­ளிட்ட நீர்நி­லைகளில் நீர் இருப்புவிவ­ரங்­கள் குறித்தும் அதிகாரிகளி­டம் முத­ல­மைச்­சர் கேட்­டறிந்­தார்.மேலும் கட்­டுப்­பாட்டு மையத்திற்கு வரும் புகார்களை ஆய்வு செய்து நட­வடிக்கை எடுக்க வேண்­டும் என அதிகா­ரிகளுக்கு அறிவுறித்தினார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சி­யர்­க­ளு­டன் காணொலிகாட்சி மூலம்       முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் ஆலோ­சனை நடத்தினார்.