சென்னை, அக.15 திருச்செந்தூரில் புதிதாககட்டப்பட்டுள்ள பக்தர்கள்தங்கும் விடுதியை முதல்-
அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 68.36கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ளபக்தர்கள் தங்கும் விடுதி, முடிகாணிக்கை மண்டபம், சுகாதார
வளாகங்கள், நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் ஆகிய 4 முடிவுற்ற பணிகளை முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் இன்று சென்னைதலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.மேலும் அவர், திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி திருக் கோவிலில் 1.50கோடி ரூபாய் மதிப்பீட்டில்வேத பாடசாலை மற்றும்கருணை இல்லம் கட்டும்பணி மற்றும் 96 லட்சம்ரூபாய் மதிப்பீட்டில் சரவணப்பொய்கையில் செயற்கைநீரூற்றுகள், வண்ண விளக்குகள்,நடைபாதையுடன் கூடிய அழகியபூங்காவாக புதுப்பொலிவுடன்புனரமைக்கும் பணி மற்றும் அதன் உபகோவிலானகிருஷ்ணபுரம் வெங்கடாஜலபதி திருக்கோவிலில் 2.35கோடி ரூபாய் மதிப்பீட்டில் தெப்பக்குளம் சீரமைக்கும்பணி மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தாக அன்னதானக் கூடம் கட்டும்பணி என மொத்தம் 5.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,தலைமைச் செயலாளர் முருகா னந்தம் மற்றும் அரசுஉயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூரில் ரூ.68.36 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!






