தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூல் லிப், ஹான்ஸ் உள்ளிட்ட 25 கிலோ புகையிலைகள் பறிமுதல்!

 

ஸ்ரீமுஷ்ணம்அருகே கூல் லிப், ஹான்ஸ் உள்ளிட்ட 25 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைகள் பறிமுதல்

தமிழகம் முழுவதும் பள்ளி அருகில் ஹான்ஸ், கூல் லிப் போன்ற புகையிலை பொருட்களை விற்க தடை செய்து உச்சநீதிமன்றம் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கடுமையான எச்சரிக்கை வைத்துள்ளது இந்த நிலையில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள சோழதரம் கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் இன்று காலை சோழதரம் கடைவீதி, மற்றும் பள்ளிகள் அருகே உள்ள பெட்டிக்கடை மளிகை கடை உள்ளிட்ட கடைகளை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது சோழதரம் மெயின் ரோட்டில் அருகே இருக்கும் சீனிவாசன் என்பவரது மளிகை கடை ஆய்வு செய்தபோது கடையின் உள்ளே சுமார் 25 கிலோ மதிப்பிலான ஹான்ஸ், கூலிப்,விமல் போதை பாக்கு போன்றவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்

தது உடனடியாக போலீசார் அதனை கைப்பற்றி அருகே உள்ள சோழதரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கடையின் உரிமையாளர் போலீசாரை கண்டதும் தப்பி சென்றதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒரே கடையில் 25 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைகள் இந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சடைந்தனர்.
மேலும் இதுபோன்ற பல்வேறு பள்ளிக்கூடங்கள் உள்ள பகுதிகளை பகுதிகளை சோதனை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.