பள்ளி வளா­கங்­கள் அருகே புகை­யிலை விற்க தடை- நீதிமன்­றம் உத்­த­ரவு!

சென்னை,செப்­26 பள்ளி வளா­கங்­கள் அருகே புகையிலை  பொருட்­கள் விற்பனை செய்­வதை தடை செய்ய நட­வடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதி ம­ன்றம் மதுரை அமர்வு உத்­த­ரவிட்டுள்­ளது.பள்ளி அருகே கூல்லிப் உள்­ளிட்ட புகையி­லைப் பொருட்­கள் விற்­பதை நாடு முழுவதும் தடை செய்யவேண்­டும் என்று ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது.மாணவர்­கள்,இளை­ஞர்­க­ளின் எதிர் கா­லத்தை சீரழிக்கும் குட்கா,கூல் லிப் போன்ற பொருட்களை தடை செய்­யக்கோரி வழக்கு தொடரப்­பட்­டுள்­ளது.இவ்­வ­ழக்கில் முதல் கட்­ட­மாக பள்ளி வளாகங்­கள் அருகே புகையிலை பொருள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்யவேண்டும் என்று ஐகோர்ட் குறிப்பிட்­டுள்­ளது.போதைப் பொருட்கள் விற்­ப­னையை தடை செய்ய மத்திய அரசு நட­வடிக்கை எடுக்க வேண்­டும் என்றும், குட்கா பொருட்­களை தயாரிக்கும் நிறுவ­னங்­க­ளுக்கு கடும் கட்­டுப்­பா­டுகளை விதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்­தப்­பட்­டுள்­ளது.புகை­யிலை பொருட்­கள் விற்பனை தொடர்­பான மத்திய அரசின் சட்டத்தில், திருத்­தங்­கள் செய்­வது தொடர்­பாக பதில் மனு தாக்­கல் செய்­ய­வும் மத்திய அரசுக்கு உத்­த­ரவி­டப்பட்­டுள்­ளது.