சென்னை நாகர்கோவில் உட்பட 12 இடங்களில் என்.ஐ.ஏ.சோதனை! தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆள் சேர்த்த வழக்கில் தேடுதல் வேட்டை!!

சென்னை,செப்.24–தடை செய்­யப்­பட்ட இயக்­கத்­திற்கு ஆட்­கள் சேர்த்­தது தொடர்­பான வழக்­கில் சென்­னை­யில்10 இடங்­கள் உட்­பட தமி­ழ­கம் முழு­வ­தும் 12இடங்க­ளில் இன்று காலைமுதல் என்.ஐ.ஏ.அதி­கா­ரி­கள்சோதனை நடத்தி வரு­கின்­ற­னர்.
கடந்த ஜூன் மாதம் ஒருயூடி­யூப் சேன­லில், தடைசெய்­யப்­பட்ட ஹிஸ்பு – உத்தஹீர் இயக்­கத்­துக்கு ஆத­ர­வான கருத்­து­கள் இருந்­ததை சென்னை சைபர் கிரைம் போலீ­ஸார் கண்­டறிந்து,விசா­ரணை செய்­த னர்.இதில், சென்னை ராயப்­பேட்­டையை சேர்ந்த ஹமீது உசேன் என்­ப­வர் டாக்­டர் ஹமீது உசேன் டாக்ஸ் என்ற பெய­ரில் அந்த யூடி­யூப் சேனல் மூலம் தடை செய்­யப்­பட்ட பயங்­க­ர­வாத இயக்கத்­துக்கு ஆத­ர­வாக பேசி,மூளைச் சலவை செய்து இளை­ஞர்­களை திரட்டி வந்­த­தும், ராயப்­பேட்டை ஜானி­ஜான்க்­கான் சாலை­யில் இதற்­காக அலு­வ­லகம் அமைத்து ஒவ்­வொரு ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யும் ரகசிய கூட்­டம் நடத்தி, தடைசெய்­யப்­பட்ட இயக்­கத்­துக்கு ஆத­ர­வான கருத்­து­களை பரப்பி வந்­த­தும் தெரி­ய­வந்­தது.இது தொடர்­பாக சென்னை சைபர் குற்­றப்­பி­ரிவு போலீ­சார் வழக்­குப் பதிவு செய்து,ஹமீது
உசேன், அவர் சகோ­த­ரர் அப்­துல்ரகு­மான் உள்­பட 6 பேரை கைது செய்­த­னர். ஹமீது உசேன் கவு­ரவ பேரா­சி­ரி­ய­ராக பணி­யாற்றி கொண்டு ஹிஸ்­பு­ உத்த­ஹீர் இயக்க ஆத­ர­வாக செயல்­பட்டு வந்­த­தும் தெரி­ய­வந்­தது.இந்த வழக்­குத் தொடர்­பாக 10 இடங்­க­ளில் திடீர் சோதனை நடத்­தி­னர்.அதில் முக்­கி­ய­மான ஆவணங்­களை கைப்­பற்­றப்­பட்­டது.பின் சைபர் கிரைம் போலீ­சார் பதிவு செய்த வழக்­கில், தேச விரோத செய­லுக்­கு­ரிய சட்­டப்­பி­ரி­வு­கள் மற்­றும் உள்­நாட்டு பாது­காப்புபிரிவுசட்ட பிரி­வு­கள் சேர்க்­கப்­பட்­டி­ருந்­ததால் வழக்­கின் விசா­ரணை என்.­ஐ­.ஏ­வுக்கு விரை­வில் மாற்­றப்­ப­டும் என தெரி­விக்­கப்­பட்டிருநதது.ஏனெ­னில் இச் சட்­டப்­பி­ரி­வு­களை ஒரு வழக்­கில்
சேர்க்­கப்­பட்­டால், அந்த வழக்­கின் விசா­ர­ணையை என்­ஐஏ நேர­டி­யாக தங்­களது கட்­டுப்­பாட்­டுக்­குள் எடுத்துவிசா­ரிக்­கும் அதி­கா­ரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.இதன் அடிப்­படை­யில் இந்த வழக்­கின்விசா­ரணை என்.ஐ.ஏ.வுக்கு அண்­மையில் மாற்­றப்­பட்டு, ஆவணங்­கள் ஒப்­படைக்­கப்­பட்­டன.இதை­ய­டுத்து சென்னை என்.ஐ.ஏ. அதி­கா­ரி­கள்,புதி­தாகஒரு வழக்­கைப் பதிவு செய்து, விசா­ர­ணையை தொடங்­கி­னர்.சர்­வ­தேச தொடர்­பு­கள் இந்த வழக்­கில் இருப்­பதாக என்.ஐ.ஏ. சந்­தே­கிப்­பதால்,விரை­வில்இந்த விவகா­ரத்­தில் பலர் கைது செய்­யப்­பட்டு,விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் எனகூறப்­பட்­டது.இந்­நி­லை­யில், ஹிஸ்­புல் உத்தஹிர் இயக்­கத்­துக்கு ஆத­ர­வாக கருத்து தொடர்­பாக இன்று என்.ஐ.ஏ.அதி­கா­ரி­கள் சோதனை நடத்தி வரு­கின்­ற­னர்.அதன்­படி சென்­னையில்,ராயப்­பேட்டை,வண்­ணா­ரப்­பேட்டை,திரு­வல்­லிக்­கேணி,ஏழு­கி­ணறு,நீலாங்­கரை,வெட்­டு­ வாங்­கேணிமற்­றும்புற­ந­கர் பகு­தி­க­ளான தாம்­ப­ரம்,வண்­ட­லூர், நன்­மங்­கலம் உள்­ளிட்ட 10 பகு­தி­க­ளில் இந்த சோதனை நடைபெற்று வரு­கி­றது. நீலாங்­கரை, வெட்­டு­வாங்­கேணி குறுக்­குத்­தெ ­ரு­வில் உள்ள வீட்­டில் அதி­கா­ரி­கள் சோதனை நடத்தி வரு­கி­றார்­கள். அதே­போல, தாம்­ப­ரம் காவல் ஆணை­ய­ரக பகு­தி­க­ளில் 3 இடங்­க­ளி­லும், பெரும்­பாக்­கம் உள்ளிட்ட 3 இடங்­க­ளி­லும் சோதனை நடந்து கொண்­டி­ருக்­கி­றது.தமிழ்­நாட்­டில் நாகர்­கோவில், புதுக்­கோட்டை உள்ளிட்ட 12 இடங்­க­ளில்,இந்த வழக்­குக்­கான ஆதா­ரங்­களை திரட்­டும் வகையில்என்.ஐ.ஏ.அதி­கா­ரி­கள் தொடர்­பு­டையநபர்­களின் வீடு­கள்,அலு­வல­கங்­களில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வரு­கின்­ற­னர். மேலும் இந்த வழக்­கில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை தேடும் பணி­யும் நடைபெற்று வரு­கி­றது.பல மணி நேர­மாகநடைபெ­றும் இந்த சோதனையில் டிஜிட்­டல் ஆவணங்­கள் உள்­ளிட்ட பல முக்­கிய
ஆவணங்­கள் கைபற்­றபட்­டதாக என்.ஐ.ஏ.தரப்­பில்கூறப்­ப­டு­கி­றது. சோதனை நடைபெ­றும் பகு­தி­க­ளில் பலத்த போலீஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.