விதிமுறைகளை மீறியதற்காக மணிமேகலை மீது விஜய் தொலைக்காட்சி வழக்கு தொடரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிமேகலை – பிரியங்கா
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்தவர் மணிமேகலை.திடீரென, சக பெண் ஆங்கர் ஒருவர் அதே நிகழ்ச்சியில் தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய ஆதிக்கத்தை செலுத்தியதாக கூறி தனக்கு காசு பணத்தை விட சுயமரியாதை தான் முக்கியம் என கூறி நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
விதிமுறை மீறல்?
மேலும், அந்த குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் பிரியங்கா எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து பல பிரபலங்களும், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அதே சமயம் குரேஷி, அமீர், பாவனி உள்ளிட்ட பிரபலங்கள் பிரியங்காவுக்கு ஆதரவாக பேசியிருந்தார்கள்.
இந்நிலையில், விஜய் தொலைக்காட்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை விதிமுறைகளை மீறியதாக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு நிகழ்ச்சிசியில் பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள் என்றால் அதில் கலந்துகொள்ள சில ஒப்பந்த விதிமுறைகள் இருக்கும். அதனை மணிமேகலை மீறியதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் விஜய் தொலைக்காட்சி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






