தாராபுரம், செப் 20-
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்அருகே உள்ள
குண்டடம்இடையன் கிணறு சாலையில், தனியார்
நூற்பாலை அருகே சாலை ஓரம் கொட்டப்பட்டு கிடந்த
குப்பையில்சுமார்30க்கும் மேற்பட்ட தேசியக்கொடிகள்
கிடப்பது போல்வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக
வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் சமூக ஆர்வலர்கள்
மற்றும் பொதுமக்களிடையே
அதிர்ச்சியடைந்தனர்.
தேசியக்கொடி பற்றி விழிப்புணர்வு இல்லாதவர்கள் எவறேனும் வீசி சென்றார்களா என்ற கோணத்தில்
குண்டடம் காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.தேசியக் கொடிகளை குப்பையில்வீசிசென்ற நபர்கள்
யார் என்று விசாரணை செய்து வருகின்றனர்.கடந்த மாதம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர
தினவிழா கொண்டாடப்பட்ட நிலையில் தேசியக்கொடிகள்
குப்பையில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தேசியக்கொடிகளை குப்பையில் வீசி சென்றவர்கள்
குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாராபுரம் அருகே தேசியக்கொடிகள் குப்பைகளில் கிடப்பது போல் காட்சி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி!






