புவனகிரி அருகே ஒரு மணி நேரத்துக்கு மேலாக பழுதாகி நின்ற அரசு விரைவு பேருந்து பயணிகள் கடும் அவதி
பேருந்து முழுவதும் பளிச்சென விளம்பரங்கள் வரைய தெரிந்த விடியா அரசுக்கு பழுதில்லாமல் அரசு பேருந்து ஓட்ட வேண்டுமே என்ற அக்கறை இல்லாமல் போனது ஏன் என பயணிகள் கேள்வி
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின் ரோடு பகுதியில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு அதிவிரைவு சொகுசு பேருந்து பொழுதாகி நின்றது. அப்போது அரசு பேருந்தின் பின் சக்கரம் டயர் வெடித்து பழுதானதால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பேருந்து சாலையிலேயே நின்றது. இதனால் பரபரப்பான போக்குவரத்து நிறைந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கும் ஏற்பட்டது. மேலும் பேருந்தில் பயணம் செய்த
பயணிகள் அவதி அடைந்தனர். தனியார் மெக்கானிக்கை வைத்து பேருந்தின் பழுதான பின் சக்கரத்தை கழற்றி மாட்டும் பணிகள் நடைபெற்றது. அரசு பேருந்துகள் தினமும் இவ்வாறு பழுதாகி வருவது பேருந்து பயணிகளை வேதனையும், கடும் அதிர்ச்சியையும் அடைய வைத்துள்ளது. அரசு பேருந்து முழுவதும் பளிச்சென விளம்பரங்களை வரையத் தெரிந்த அரசுக்கு பேருந்துகளை பழுதில்லாமல் ஓட்ட வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் போனது ஏன் என பேருந்து பயணிகள் வேதனையோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
செய்தியாளர் ஸ்ரீமுஷ்ணம் சண்முகம்






