தயாரிப்பாளராக மாறியது ஏன்?ஹிப் ஹாப் ஆதி!

ஹிப் ஹாப் தமிழா என்டர்டைன்மென்ட் சார்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி, இசையமைத்திருக்கும் படம் “கடைசி உலகப் போர்” இதன் பிரமோஷன் விழாவில் நடிகை அனகா பேசும் போது ஆதியுடன் இரண்டாவது படம். கதையை மிக வித்தியாசமாக இருந்தது நடிக்க கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆதி தைரியம் தந்தார். மிக அழுத்தமான படம். மிகப்பெரிய நடிகர்கள் நடித்துள்ளார்கள். ஆதி மிகச் சிறப்பாக இயக்கியுள்ளார் என்றார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி பேசியது: என்னை அறிமுகம் செய்த சுந்தர்சி அண்ணா இங்கு வந்து எங்களை வாழ்த்தியது மகிழ்ச்சி நட்டி சாருக்கு இப்படத்தில் மிக முக்கியமான ரோல் மிக சூப்பராக நடித்திருக்கிறார். சிங்கம் புலி அண்ணாவும் சிறப்பாக நடித்துள்ளார். அனகா அழகம்பெருமாள் என நிறைய பேர் நடித்துள்ளார்கள். விஜயன் என்னும் ஒரு துணை நடிகரை வில்லனாக நடிக்க வைத்துள்ளோம். அவர் கண்டிப்பாக பெரிய நடிகராக வருவார் இந்த படம் மற்ற படங்களிலிருந்து புதிதாக இருக்கும் ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே எனும் சித்தர் வாக்கு தான் இந்த படத்தின் அடிப்படை. நாம் சண்டையிட்டு கொண்டால் உலகம் அழிந்து போய்விடும் என்பது தான் இப்படம். நல்ல கருத்தை சொல்லவே தயாரிப்பாளராகி உள்ளேன். விழாவில் சுந்தர் சி, நட்டி நட்ராஜ், அழகம்பெருமாள், ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர். இப்படம் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.