ஆதார் கார்டு புதுப்­பிக்க டிசம்பர் 14- ந்தேதி வரை கால அவ­கா­சம் நீட்டிப்பு!

புது­டெல்லி , செப்.13. ஆதார் கார்டு இந்­திய மக்­க­ளின் அடை­யாளமாக இருக்­கி­றது. வங்கிகணக்கு தொடங்­கு­வது முதல் பான் கார்டு, டிரைவிங் லைசென்சு உள்­ளிட்ட அர­சின் அனைத்து சேவை­களை பெற ஆதார்கார்டு கட்­டா­யம் ஆகும். எனவே அனை­வ­ரும் தற்­போது ஆதார்கார்டு வைத்­தி­ருக்­கி­றார்­கள்.இந்தநிலை­யில் ஆதார் கார்டவைத்­தி­ருப்­ப­வர்­கள் 10 ஆண்­டு­க­ளுக்கு ஒரு­ முறை தங்­களது ஆதாரை புதுப்­பித்து கொள்ள வேண்­டும் என்று ஆதார் ஆணை­யம் அறி­வு­றுத்­து­கி­றது.அதா­வது அதில் புதுப்பிப்பு என்­பது பல­ரும் தங்க­ளது முக­வரி மற்­றும் செல்­போன் எண்­களை மாற்றி்­ இரு­பார்­கள். முகங்கள் மாறி்­  இருக்கும். ஆனால் ஆதா­ரில் பழைய புகைப்­படங்­கள் இருக்­கும். அதே போல் கைரேகை மாறி இருந்­தால்,அவர்­களால் ரேஷன் கடை, வங்­கி­கள் மற்­றும் சிம்­கார்டு வாங்கும் இடங்­க­ளில் சுய­சான்று செய்­வதில் பிரச்சனை இருக்­கும். இந்த பிரச்­ச­னைகளை தவிர்க்­க­ தான் 10 ஆண்­டு­க­ளுக்கு ஒருமுறை ஆதார்புதுப்­பிக்க வேண்­டும் என்று ஆதார் ஆணையம் கூறு­கி­றது. அதற்­காக 10ஆண்­டு­கள் ஆன பிறகு சம்­பந்­தப்­பட்ட­வர்­களுக்கு குறுஞ்­செய்தி அனுப்­பப்­படும். அவர்­கள் மையங்கள் அரு­கில் உள்ளில் ஆதர் புதுப்­பிக்­கும் பணி­யினை மேற்­  கொள்­ள­லாம் .அப்­போது புகைப்­படங்கள்,கைரேகை­களை புதி­தாக பதிவு செய்து கொள்­ளலாம். ஆதார்கார்­டு­களை நாளை மறு­தி­னம் வரை (செப்­டம்­பர்14-ந்தேதி) இல­வ­சமாக புதுப்­பித்­துக் கொள்­ளலாம் என தெரி­விக்­கப்பட்­டது. அதி­கா­ரப்­பூர்வ இ-சேவை மையம், தாலுகா அலு­வ­ல­கங்­கள் உள்­ளிட்ட இடங்­க­ளில் இல­வ­சமாக புதுப்­பித்­துக்கொள்­ள­லாம். செப்­டம்­பர் 14-ந் தேதிக்­குப்­பின்பணம் செலுத்த வேண்­டி­யி­ருக்­கும் எனத் தெரி­விக்கப்­பட்­டது.இந்த நிலை­யில் செப்டம்­பர் 14-ந்தேதி வரை இல­வ­சமாக அப்­டேட் செய்து கொள்­ள­லாம் என்ற சலுகை தற்­போது டிசம்­பர் 14-ந்தேதி வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.இத­னால் டிசம்­பர்14ந்தேதி வரை இல­வ­சமாக முக­வரி போன்ற மாற்­றங்களை செய்து கொள்­ளலாம். ஆன்­லைன் மூலம் முக­வ­ரியை மாற்­றிக்கொள்­ள­லாம். இதற்கு 50 ரூபாய் கட்­டணம் செலுத்த வேண்­டும்.