விசிக மது ஒழிப்பு மாநாட்­டிற்கு அதி­மு­கவை அழைத்­தது அவர்­க­ளின் விருப்­பம்! சிவகங்­கை­யில் உத­யநிதி ஸ்டாலின் பேட்டி!!

சிவ­கங்கை,செப்.11 சிவ­கங்கை மாவட்­டத்தில் இளை­ஞர் நலன் மற்றும் விளை­யாட்டு துறை அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளில் கலந்து கொண்­டார்.முன்­னதாக சிவ­கங்கை விளை­யாட்டு அரங்­கில் தமி­ழக முதல்­வர் கோப்­பைக்­கான விளை­யாட்­டுப் போட்­டி­யினை அமைச்­சர் உத­ய­நிதிஸ்டாலின் துவக்கிவைத்­தார். அதன் பின்­னர் சிவ­கங்கை மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்தில் நடைபெற்ற ஆய்வுகூட்­டத்­தில் பல்­வேறு துறைஅதி­கா­ரி­க­ளி­டம் மத்திய, மாநில அர­சுக­­ளின்­,  திட்­டங்­களை  செயல் ­படுவது குறித்து கேட்­டறிந்து, ­சில ஆலோசனைகளை தெரி­வித்தார்.­ பினனர் செய்­தி­யா­ளர்­களை சந்­தித்­த போது, மது­ரையைவிட சிவ­கங்­கை­யில் நடைபெற்ற ஆய்வு கூட்­டம் சிறப்­பாக நடைபெற்­றதாகவும், நிறை வேறப்பட்ட அரசு திட்­டங்­கள் குறித்தும்,இன்­னும் நிறை வேற்றப்­பட­மல் உள்ள நலத்திட்­டங்­கள்  குறித்­தும் ­ கேட்­ட­றிந்­தத­க­வும், விரைந்து அரசு திட்­டங்­களை செயல்­படுத்த   நட­வ­டிக்கை எடுகக அறி­வுரை வழங்­கி­ய­தா­க­வும், ஆய்­வுப்பணி­கள் குறித்து முழு அறிக்­கையும் முதல்­வ­ரி­டம் தெரி­விக்­கப்­ப­டும் என தெரி­வித்­தார். விசிக மதுஒழிப்பு மாநாட்­டில் அதி­முக பங்­கேற்­பது குறித்த கேள்­விக்கு அது அவர்களது விருப்பம் அதனை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.