நடராஜப் பெருமானுக்கு சுமார் 3 கிலோ தங்கத்தில் திருவாச்சி மற்றும் ஒரு கிலோ 400 கிராம் வெள்ளியில் திருவாச்சி !

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு புவனகரியை சேர்ந்த சுலேக்சனா கோவிந்தசாமி குடும்பத்தார் சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு சுமார் 3 கிலோ தங்கத்தில் திருவாச்சி மற்றும் ஒரு கிலோ 400 கிராம் வெள்ளியில் திருவாச்சி செய்து இதை நடராஜர் கோயிலின் பிரகாரத்தில் மேல தாளத்துடன் ஊர்வலமாக வந்து நடராஜர் கோயில் தீட்சதர் சிவராமன் தலைமையில் நடராஜ பெருமானுக்கு காணிக்கையாக வழங்கினார்கள் இவர்கள் தங்களது குடும்பத்தின் பெயர்கள் மற்றும் உறவினர்கள் பெயரை போட வேண்டாம் என்று தனது தாய் தந்தையின் அனுக்கிரகத்தால் தான் எங்களால் இவை முடிந்தது என்றும் இதனுடைய மதிப்பு இரண்டு கோடியே 50 லட்சம் ரூபாய் என்று கூறினார்கள் சிதம்பரத்தை சேர்ந்த முருகன் ஜிவல்லரி நிறுவனத்தினர் இதை வடிவமைத்து கொடுத்தார்கள் சிவராம தீட்சதர் கூறுகையில் சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு இவர்கள் குடும்பத்தார்கள் வேண்டுதலால் இந்த காணிக்கையை நடராஜா பெருமாளுக்கு அளித்தார்கள் என்றும் இந்த காணிக்கை சட்டரீதியாக நடராஜர் கோயில் செகரட்டரி வெங்கடேசன் தீட்சதர் மற்றும் பொது தீட்சர்கள் முன்னிலையில் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.

செய்தியாளர்                      ஸ்ரீமுஷ்ணம் சண்முகம்