சேரை மாவடி தெரு ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதூர்த்தி விழா.

விநாயகர் சதூர்த்தி அன்று சேரன்மகாதேவி மாவடி தெரு கன்னடியன் கால்வாய் படித்துறையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதூர்த்தி விழா சிறப்பாக நடைப்பெற்றது. மாலை 6.00 மணியளவில் விநாயகருக்கு , அபிஷேகம் நடைப்பெற்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இந்த பூஜையில் மாவடி தெரு பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு விநாயகரை வழிப்பட்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது. விநாயகர் அலங்கார பூஜையினை . முத்துக்குமார் பூசாரி முன் நின்று சிறப்பாக நடத்தினார்.