செந்தண்ணீர்புரத்தில் தமிழக வெற்றி கழக அலுவலகம் திறப்பு: திருவெறும்பூர் எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜி பங்கேற்பு

திருச்சி, ஜூலை 27:
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜெயின் பிறந்த நாளையும், தமிழக ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சரான ஆனந்தின் பிறந்த நாளையும் முன்னிட்டு, திருச்சி செந்தண்ணீர்புரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் புதிய கட்சி அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான நவல்பட்டு விஜியின் வழிகாட்டுதலின்படி, A.J. பிரசாத் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில், நவல்பட்டு விஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, சமூக நலப் பணிகளின் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், அப்பகுதி பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டதால் நிகழ்ச்சி சிறப்புப் பெற்றது.
இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், கட்சியின் பல்வேறு நிலை பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் செந்தண்ணீர்புரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.