350-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவலர்கள் பயனடைந்தனர்
திருச்சி,
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் அவர்களின் ஏற்பாட்டில், துளசி பார்மசி இணைந்து நடத்திய மாதாந்திர இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை (06.07.2026) காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
முகாமில் ரத்த அழுத்தம் (BP), ரத்த சர்க்கரை (Blood Sugar) பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், BMI (Body Mass Index) அடிப்படையில் உடல் எடை சரியான அளவில் உள்ளதா என்பதை அறியும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தற்போது பரவி வரும் ஜலதோஷம் மற்றும் சுவாசப் பாதிப்பு காரணமாக, நுரையீரல் செயல்திறன் (Lungs Test) பரிசோதனையும் நடத்தப்பட்டு, கலந்து கொண்டவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் பிரபு, செயற்குழு உறுப்பினர்கள் சேது மாதவன், அருண், மூத்த வழக்கறிஞர் ஜான் ரஸ்கின், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்திற்கு வந்த காவல்துறையினர் உள்ளிட்ட 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்து பயனடைந்தனர்.
உடல்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் மாதந்தோறும் நடத்தப்படும் இந்த மருத்துவ முகாம், சட்டத்துறை சார்ந்தோர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.






