சேரன்மகாதேவி,
01-07-2026.
தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி (நெல்லை) பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்களை எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளையும் மரியாதையையும் தெரிவித்துக் கொண்டனர்.
நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையின் பொறுப்பு தலைமை மருத்துவர் Dr. பாலசுப்பிரமணியன், மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் Dr. சுரேஷ் துரை, ரத்த வங்கிப் பிரிவு மருத்துவர் Dr. ரவிசங்கர், இரத்த வங்கி பேராசிரியர் Dr. பிரதிபா மற்றும் Dr. சாந்தினி உள்ளிட்ட முன்னணி அரசு மருத்துவமனை மருத்துவர்களை நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.

தங்களின் அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக அவர்களுக்கு வாழ்த்துக் கூறி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் SDPI கட்சியின் மாவட்டத் தலைவர் கோட்டூர் பீர்மஸ்தான், WIM மகளிர் அணி மாவட்டப் பொதுச் செயலாளர் S. மும்தாஜ் ஆலிமா, மருத்துவ சேவை அணி மாவட்டத் தலைவர் போத்தீஸ் பாபு மற்றும் மருத்துவ சேவை அணி மாவட்டத் துணைத் தலைவர் தாழை உசேன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






