திருச்செந்தூர் முருகன் கோவில் தரிசனக் கட்டணம் சம்பந்தமாக,சேரன்மகாதேவி நெல்சேர் திருமண மண்டபத்தை சீரமைக்கவும்  இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரிடம் சமூக ஆர்வலர் பீர்காதர் மற்றும் சேரை பி.மாரியப்பன்  சார்பில் மனு.

திருச்செந்தூர் முருகன் கோவில் தரிசனக் கட்டணம் சம்பந்தமாக மறுபரிசீலனை செய்தல் பொதுமக்கள் இலவச தரிசனம் செய்ய கோவில் சொத்துக்களை முறையாக பராமரிக்கவும் சேரன்மகாதேவி நெல்சேர் திருமண மண்டபத்தை சீரமைக்கவும்  இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரிடம் சமூக ஆர்வலர் பீர்காதர் மற்றும் சேரை பி.மாரியப்பன்  சார்பில் மனு.

‎“பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடி விசாரணை நடத்த வேண்டும்” என வலியுறுத்தல்

‎திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்த பொதுநல ஆர்வலர் மு. பி. காதர்,சேரை பி.மாரியப்பன் ஆகியோர் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரிடம் விரிவான மனு ஒன்றைஅளித்துள்ளார்.
‎இந்து அறநிலைத்துறை அமைச்சர் பாபநாசத்திற்கு செல்லும் வழியில் சேரை பி மாரியப்பன் அவர்களின் அலுவலர் எதிரில் அமைச்சரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்று மரியாதை செலுத்தினர், அதன் பின்பாக மாலை வண்ணாரப்பேட்டை விருந்தினர் மாளிகையில் நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.

‎அந்த மனுவில், தமிழகத்தின் புகழ்பெற்ற அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருச்செந்தூரில் தரிசன கட்டணங்கள் உயர்த்த ஆலோசனை என்ற தகவல் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்து வகையில் உள்ளது பக்தர்கள் அனைவரும் எந்தவித கட்டணமும் இன்றி இறைவனை தரிசிக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் ,
‎மனுதாரர் கூறுகையில், தமிழர்களின் பண்பாடு மற்றும் ஆன்மிக வாழ்வோடு நெருங்கிய தொடர்புடைய கோவில்கள் பொதுமக்களின் நம்பிக்கையின் அடையாளமாக விளங்குகின்றன. ஆனால் சில இடங்களில் பக்தர்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இது தொடர்பாக உரிய ஆய்வு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் பிற சொத்துக்களின் வருவாய் பயன்பாடு குறித்து வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், உண்டியல் வசூல்கள் மற்றும் கோவில் வருமானங்கள் எவ்வாறு செலவிடப்படுகின்றன என்பது குறித்து பொதுமக்களுக்கு தெளிவான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
‎குறிப்பாக, கோவில் நிர்வாகத்தில் பக்தர்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் செயல்பட வேண்டிய நிலையில், சில நடவடிக்கைகள் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலின் பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் பக்தர்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாக மனுதாரர் கவலை வெளியிட்டுள்ளார்.
‎அதேபோல், கோவில் சொத்துக்கள் பாதுகாப்பு, வருவாய் கணக்குகள் ஆய்வு, உண்டியல் வசூல் நடைமுறைகள் மற்றும் தரிசனக் கட்டண வசூல் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. அதேபோல் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான பல்வேறு சத்துக்கள் மற்றும் கட்டிடங்கள் முறையாக பராமரிப்பு இன்றி இருப்பதாகவும் பொதுமக்கள் இடையே கருத்து நிலவுகிறது அவற்றை ஆய்வு செய்து உரிய பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மாறும் கேட்டுக்கொள்கிறோம்,
‎மேலும் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் உள்ள அறநிலையத்துறை கிளியங்கும் திருச்செந்தூர் திருமண மண்டபம் கட்டப்பட்ட நாள் முதல் இதுவரை போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவே அந்த மண்டபம் முழுவதும் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல் மண்டபத்திற்கு புதிய வண்ணம் பூசி அழகு படுத்துதல் பொதுமக்கள் பயன்பட ஏற்ற வகையில் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் மேலும் சேர்மாதேவி பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோவிலில் தற்போது கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகின்றன அப்பனிக்கான ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லாத காரணத்தால் அருள்மிகு வைத்தியநாத திருக்கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு சுமார் நான்கு மாதம் ஆகியும் விற்பனை மற்றும் பராமரி பணிகள் எதிர்பார்த்த அளவில் விரிவாக நடைபெறாத நிலையில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக பக்தர்கள் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
‎எனவே திருப்பணி மற்றும் பராமத்து பணிகளை விரிவுபடுத்த தேவையான கூடுதல் நிதி மற்றும் நிர்வாக உதவிகளை வழங்கி கும்பாபிஷேக பணிகள் விரைந்து நிறைவேறுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்மாறும் தங்களை பணிவுடனும் கேட்டுக்கொள்கிறோம் கும்பாபிஷேக பணிகள் முழுமையாக சிறப்பாக நடைபெற கூடுதல் நிதி உதவி வழங்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் சேரன்மகாதே பகுதியில் கடந்த காலங்களில் குறைந்த பட்சம் இரண்டு தேர்தல் இருந்ததாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன எனவே நமது பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை கருத்தில் கொண்டு அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோவிலுக்கு குறைந்தபட்ச ஒரு புதிய தேரை அமைத்து வழங்கிடவும் வேண்டும்,என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
‎கோவில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை நிலைநாட்டப்பட்டு, பக்தர்களின் நலன் மற்றும் மத உணர்வுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தனது கோரிக்கையின் முக்கிய நோக்கம் என மனுதாரர் மு. பி. காதர் மற்றும் பி.மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
‎இவர்களுடன் தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்த V.S. ரமேஷ், பிரபு, ஜென் 5 வசந்தி எட்வின், முத்து கணேசன், ஆயிரத்தான், வக்கீல் வெங்கடேசன், சுரேஷ், ரமேஷ், செல்லத்துரை, ராஜேஷ், ஹரிஷ்  பேச்சிமுத்து, தர்காஸ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.