ஸ்ரீ அரவலமாடன் சாமிக்கு நேர்த்திக்கடன்!

மாவடி தெருவில் அமைந்திருக்கும் குல தெய்வம் அருள்மிகு ஸ்ரீ அரவல மாடன் சுவாமிக்கு கடந்த 4.9.2024 மாலை 6.00 மணியளவில் சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இந்த, சிறப்பு பூஜையினை மாவடி தெரு டெய்லர் திரு. ரகுநாதன் குடும்பத்தினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அரவல மாட சுவாமிக்கு படையல் படைத்து சிறப்பு பூஜை நடைப்பெற்றது. அரவலமாடன் சாமிக்கு , வெண் கலத்திலான பெரிய அரிவாள், மற்றும் முனீஸ்வரர் சாமிக்கு கமண்டலம், பிரம்ம தாண்டம், மற்றும் பித்தளை தாம்பூலம் ஆகியவைகளை நேர்த்திக் கடனாக செலுத்தினர். இந்த பூஜையில் டெய்லர் ரகுநாதன், அவரது மகன்கள் கார்த்திக், மாதுரி கார்த்திக், ராஜேஸ், கலைவாணி ராஜேஸ் நிர்மல் விஜய், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பூஜையினை சிறப்பித்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.