தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அப்பகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகி வெங்கடேசன் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட கழக பொறுப்பாளர் தர்கா சௌகத், பகுதி கழகச் செயலாளர்கள் கௌதம் மற்றும் சதீஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் சுமார் 400 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.






