முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஆலங்குளத்தில் சிறப்பு ஜெபம், தொழுகை மற்றும் இனிப்பு வழங்கல்
ஆலங்குளம், ஜூன் 22:
தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில், கட்சித் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட மற்றும் மத நல்லிணக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்ஸ் தலைமையில், ஆலங்குளம் சிஎஸ்ஐ ஆலயத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற சிறப்பு ஜெப நிகழ்வில் கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் நீண்ட ஆயுள், நல்லாட்சி மற்றும் மக்கள் நலப் பணிகள் மேலும் சிறக்க வேண்டி சிறப்பு ஜெபம் நடத்தப்பட்டது. பின்னர், ஆலயத்திற்கு வந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, ஆலங்குளம் ராஷித் சயித் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையில் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்று, முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகைக்குப் பின்னர்,
அங்கு கூடியிருந்த மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
மேலும், ஆலங்குளம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி அவர்களின் சேவையை பாராட்டினர்.
இந்த நிகழ்வுகளில் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஆலங்குளத்தில் சிறப்பு ஜெபம், தொழுகை மற்றும் இனிப்பு வழங்கல்






