தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி என்.டி.எஸ் சார்லஸ் தலைமையில் கூண்டோடு தவெகவில் இணைந்தனர்

தென்காசி – ஜூன்- 15 தென்மண்டல தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி என் டி எஸ் சார்லஸ்
தலைமையில் கூண்டோடு தமிழகஅமைச்சர் புஸ்லி ஆனந்த் தலைமையில் தவெக கட்சியில்இணைந்தனர்.
தென்மண்டல தமிழ் மாநிலகாங்கிரஸ் நிர்வாகி என் டிஎஸ் சார்லஸ் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மூப்பனார் அவரது மகன் ஜீகே வாசன் ஆகியோருடன்நெருக்கமானவரும் 42 -வருடங்கள் தொடர்ந்து கட்சி பணியாற்றிய இவர் சுரண்டை அருகே வாடியூர் அருகே பரன்குன்றாபுரம் பகுதியை சார்ந்தவர் இவர் காங்கிஸ் கட்சியின் மூத்தநிர்வாகியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் மாநில செயலாளராகவும் ஐந்து ஆண்டுகள்ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலாராக கூட்டுறவு சங்கத்தலைவராகவும் மக்கள் பணியில் பல்வேறு சேவை செய்த இவர் தென்காசி சட்டமன்ற தொகுதியில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் மாநில
காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.இவர் தமிழக வெற்றி
கழகத்தில் ஊரக வளர்ச்சி நீர்வளத்துறை அமைச்சர் புஸ்லிஆனந்தன் தலைமையில் நிதிதுறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் என்டிஎஸ்சார்லஸ் மற்றும் தன்னைச்சார்ந்த நிர்வாகிகளையும் தவெ
கழகத்தில் இணைத்து கொண்டார்