நடிகர் அஜித் தாயார் மறைவு

சென்னை, மே.31 – நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (வயது 85) உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக சென்னையில் நேற்று காலை உயிரிழந்தார்.அவரது மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,முதல்வர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் இரங்கல்தெரிவித்துள்ளனர்.
முதல்வர் விஜய்: அருமைநண்பர் அஜித் குமார் தாயார்மோகினி அம்மையார் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த வேதனைஅடைந்தேன். அவரது ஆன்மாஇறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்ததாயாரை இழந்து வாடும் நண்பர்அஜித் குமாருக்கும், அவரதுகுடும்பத்தினருக்கும் எனதுஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.மு.க. ஸ்டாலின்: அன்புச்
சகோதரர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணிமறைந்த செய்தியறிந்துவேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள்தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சிகொண்ட அன்னையினை இழந்துவாடும் அஜித்குமாரை தேற்றஎன்னிடம் வார்த்தைகள் இல்லை.அன்னையுடனான அழகியதருணங்களே இந்தத் துயரில் அவர்மீளத் துணைநிற்க விழைகிறேன்.அஜித்குமார் மற்றும் அவரதுகுடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த
இரங்கலும் ஆறுதலும்.இபிஎஸ்: திரையுலகில்முன்னணி நட்சத்திர நடிகரும் ,கார் பந்தய வீரருமான சகோதரர்
அஜித் குமாரின் தாயார் மோகினிமணி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.பாசமிகு தாயாரை இழந்துவாடும் சகோதரர் அஜித்குமார்,அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரி
வித்துக்கொள்கிறேன்.தாயார் மறைவின் போது துபாயில் இருந்த அஜித் உடனடியாக விமானம் மூலம்
நேற்று மாலை சென்னை விரைந்து வந்தார்.