சேரன்மாதேவியில் தி.மு.க பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்
நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், சேரன்மாதேவி கிழக்கு
ஒன்றியம் மற்றும் பேரூர் கழகத்தின் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக்
கூட்டம் நேற்று சேரன்மாதேவியில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய
அவைத்தலைவர் டேவிட் ஸ்டீபன் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர்
முத்துகிருஷ்ணன், சேரன்மாதேவி நகர செயலாளர் மனிஷா செல்வராஜ், சேரன்மாதேவி யூனியன் சேர்மன் பூங்கோதை குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு
ஒன்றிய செயலாளர் முத்துபாண்டி என்ற பிரபு வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன்
கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில்,
மறைந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், வயல்நம்பிகுளம் தேவசகாயம் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றிக்காக உழைத்த
கட்சியனருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு, கட்சி வளர்ச்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் அவின் ஆறுமுகம், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை
அமைப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட துணை செயலாளர்கள் மாஞ்சோலை மைக்கேல், தமயந்தி, மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மூலச்சி சீவலமுத்துக்குமார், மாவட்ட அணி அமைப்பாளர்கள் பிரேம் ஆனந்த், அன்வர் உசேன், கூனியூர் கிராம பஞ்சாயத்து தலைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






