சட்டமன்ற உறுப்பினராக முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உறுதிமொழி ஏற்பு

சென்னை: தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கூடி இருக்கிறது. இதில் முதலாவதாக தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டுள்ள விஜய், சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி ஏற்று கொண்டார். முதலமைச்சர் விஜயை தொடர்ந்து அமைச்சர்கள் எம்.எல்.ஏ-க்களாக உறுதிமொழி ஏற்றனர்.இதனை தொடர்ந்து எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டுள்ள உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார். இவரை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக உறுதிமொழி ஏற்று கொண்டனர்.