திருச்சி விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு பேட்டி:
திருச்சியை பொறுத்தவரை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறுவோம். எங்கள் கட்சியினருக்குள் இருக்கின்ற அதிருப்தி என்பது அண்ணன், தம்பிக்குள் இருக்கின்ற பிரச்சனை போன்றது தான். குடும்பத்திற்குள் நடக்கின்ற பிரச்சனை போல தான். அவற்றையெல்லாம் நாங்கள் சரி செய்து விடுவோம். நிச்சயமாக நாங்கள் 100% வெற்றி பெறுவோம்
மாநகரப் பேருந்தில் பயணம் செய்த அமைச்சர அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் விமான நிலையத்திற்கு செல்லும் பேருந்தில் பயணிகளுடன் திருச்சி விமான நிலையம் எதிர்புறத்தில் உள்ள வயர்லெஸ் ரோடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இன்று 03/09/2024 காலை பயணம் செய்தார் இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் தர்மராஜ் மணிவேல் மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் மற்றும் ,தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர்ஆ. முத்துகிருஷ்ணன், துணை மேலாளர் புகழேந்தி ராஜ், துணை மேலாளர் சாமிநாதன், உதவி மேலாளர் ராஜேந்திரன், மற்றும் பயணிகள் உடன் இருந்தனர்.






