புகையிலை பொருட்கள் மதுபாட்டில்கள் விற்பனை – ஒருவர் கைது

தூத்துக்குடியில் பெண்கள் கல்லூரி அருகே சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்ற முனியசாமி (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 42 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மதுபாட்டில்கள், ரூ. 35,000 பணம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.