தென்காசியில் இளைஞர்கள் மீது தாக்குதல், போலீசார் விசாரணை

தென்காசி மாவட்டம் தென்காசி பகுதியைச் சேர்ந்த தனுஷ் (23) மற்றும் அவரது நண்பர் கல்யாணி முருகன் (22) ஆகியோர் கடையில் டீ குடித்துவிட்டு ரொட்டியை சாப்பிட முயன்றபோது, விஜயகுமார்-ஸ்டெல்லா தம்பதியினர் திருட வந்ததாகக் கூறி இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், தென்காசி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி, இளைஞர்களை மீட்டு, தம்பதியர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.