சென்னை, ஏப்.30 – தவெக தலைவர் விஜய் நேற்று மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில்
உள்ள சாய் பாபா கோயிலில் தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் கடந்த 23- ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85 சதவீதவாக்கு கள் பதிவாகின. இந்த தேர்தலில் தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்மாளர்கள் போட்டியிட்டனர்.
சேலம் மாவட்டம் எடப்மாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியது
தவெக . தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் சில நகரங்களில் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.
வரும் மே4- ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது .இந்நிலையில், விஜய் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்குள் சென்று மூலவரை தரிசனம் செய்தார்.தொடர்ந்து அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து , நேற்று தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் சென்றார். அதன் பிறகு அங்கிருந்து அவர் காரில் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். விஜய்யை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
ஷீரடி சாய் பாபா கோவிலில் விஜய் தரிசனம்






