அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் இசக்கி சுப்பையா தீவிர தேர்தல் பிரச்சாரம்

அம்பாசமுத்திரத்தில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் இசக்கி சுப்பையா தீவிர தேர்தல் பிரச்சாரம்

அம்பாசமுத்திரம்:
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க. வெற்றி வேட்பாளர், கழக அமைப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டத்துறை அமைச்சரான டாக்டர் இசக்கி சுப்பையா M.A., M.L., PhD அவர்கள் இன்று கோபாலசமுத்திரம் பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
காலை 9.00 மணியளவில் கோபாலசமுத்திரம் பஜாரில் அமைந்துள்ள ஸ்ரீ அற்புதசெல்வ விநாயகர் கோவில் முன்பு சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்த அவர், பின்னர் தேர்தல் பரப்புரையை இனிதே ஆரம்பித்தார்.

அதனைத் தொடர்ந்து வண்டி மரித்த அம்மன் கோவில், வடக்கூர் முப்புடாதி அம்மன் கோவில், மூப்பனார் தெரு, மேல தெரு, பிரகாஷ் பதி தெரு, கொத்தங்குளம் கோவில் முன்பு, சுப்பிரமணியபுரம், ஓமநல்லூர், பிரான்சேரி முப்புடாதி அம்மன் கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் ஆதரவு கோரினார்.
அப்போது அவர், அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றி சின்னமான “இரட்டை இலை”க்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பொதுமக்களும் உற்சாகமாக வரவேற்று ஆதரவு தெரிவித்தனர்.

பின்னர் மாலை 6.00 மணியளவில் மேலச்செவல் பகுதியில் பிரச்சாரம் தொடர்ந்தது. செக்கடி பஜார், முப்புடாதி அம்மன் கோவில் தெரு, ரஸ்தா வடக்கு தெரு, செல்விபுரம், தேசமாணிக்கம், மாணிக்கநகர், நயினார் குளம், கீழசெவல் காமராஜர் தெரு, காத்தான் தெரு, சொக்கலிங்கபுரம், மூவேந்தர் தெரு, வாணியங்குளம், ராஜீவ்காந்தி நகர் மற்றும் கொழும்படை பத்தமடை பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு தோறும் சென்று வாக்கு சேகரித்தார்.
இந்த தேர்தல் பிரச்சாரத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு உற்சாகத்தை ஏற்படுத்தினர்.