வத்தலகுண்டு-ல் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 10 ஆண்டுகள் சிறை, ரூ.50 ஆயிரம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு-ல் கடந்த 2022-ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முத்துச்சாமி (எ) அருண்குமார்(24) என்பவரை வத்தலகுண்டு போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதம் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி ஆகியோரின் முயற்சியால் இன்று

திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் முத்துச்சாமி (எ) அருண்குமாருக்கு ஆயுள் தண்டனை உடன் கூடிய 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்