திருநெல்வேலி, மார்ச் 24:
திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வி.வி.பேட் கருவிகளுக்கான முதற்கட்ட இணைய வழி ஒதுக்கீடு (1st Randomization) பணிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றன.
இந்த ஒதுக்கீடு பணிகள் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளிப்படையாக நடத்தப்பட்டு, பாதுகாப்பு கிடங்கியில் இருந்த வாக்கு இயந்திரங்கள் திறக்கப்பட்டு, அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏற்ப பிரித்து அனுப்பி வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான மரு. இரா. சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் விதிமுறைகளின்படி பாதுகாப்பாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதை அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.






