இளை­ஞர்­களை ஏமாற்­றும் பாஜக அர­சுக்கு ஜம்மு காஷ்­மீர் தேர்­த­லில் பதில் கார்கே தாக்கு!

ஜம்மு-காஷ்மீர், செப்.02: ஜம்மு­காஷ்­மீர் மாநி­லத்­தில் செப்டம்­பர் 18, செப்டம்­பர் 25 மற்­றும் அகடோபர் 1-ந்தேதி என மூன்று கட்­டங்­களாக வாக்குப்­ப­திவு நடைபெற இருக்­கி­றது.இந்த தேர்­த­லில் காங்­கி­ரஸ்- பரூக்அப்­துல்லா தலை­மை­யி­லான தேசியமாநாடு கட்சி கூட்டணி அமைத்­துத்தேர்­தலை சந்­திக்கின்­றன. பாஜ­க­வும், மெஹ­பூபாமுப்­தி­யின் மக்­கள் ஜன­நா­ய­கக் கட்சிஆகி­யவை­யும் களத்­தில் இருக்கின்றன. தேர்­தல் தேதி  ெநருங்கு­வதால் பிரச்­சாரக்களம் சூடு ­பிடிக்­கத் ­தொடங்கி­யுள்­ளது.வரும் செப்டம்­பர் 4ந் தேதி காங்கி­ரஸ் கட்சி சார்­பில் பொதுக்கூட்­டம் நடக்க உள்ளது. இதில் ராகுல்காந்தி, மல்­லி­கார்­ஜுன கார்கே, பிரி­யங்காகாந்தி உள்ளிட்டோர் கலந்­து­ கொள்­கின்­ற­னர்.  பிர­த­மர் நரேந்­திர மோடி அண்ட் கம்­பெனி காஷ்­மீ­ருக்குச் சிறப்பு அந்­தஸ்து அளிக்­கும் சட்­டப்­பி­ரிவு 370ஐ மத்­திய பாஜக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்த பிறகு நடக்­கும் முதல் தேர்­தல் இது. எனவே இந்த விவ­கா­ரம் பிர­தான பிரச்சனை­யாக முன்னிறுத்­தப்பட்டு வரு­கி­றது. இந்நிலலை­யில் ஜம்முகாஷ்­மீர் இளை­ஞர்­களை மோடி ஏமாற்றி வரு­வ­தா­கக் காங்கி­ரஸ் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே கடு­மை­யாக சாடி­யுள்­ளார்.இது­தொடர்­பாக அவர் வெளி­யிட்டுள்ள எக்ஸ்பதி­வில், ஏமாற்­று­தல் என்­பதே ஜம்முகாஷ்­மீர் இளை­ஞர்­கள் விஷ­யத்­தில் பாஜக கடைப்­பி­டிக்­கும் ஒரே கொள்கை. எதிர்­ வரும் சட்­ட­மன்­றத்தேர்­த­லில் பிர­த­மர்நரேந்­திர மோடி அண்ட்கம்­பெனிக்கு இங்­கி­ருந்து வெளி­யே­றும் கதவை இளை­ஞர்­கள் நிச்­ச­யம் காண்­பிப்­பார்­கள். கடந்த மார்ச் மாத நில­வ­ரப்­படி ஜம்மு காஷ்­மீ­ரில் இளை­ஞர்­களுக்கான வேலை­யின்மை விகி­தம் 28.2 சத­வீத அள­வுக்கு அதி­க­ரித்­துள்­ளது.2019 முதல் காஷ்­மீ­ரில் 65 சத­வீத அர­சுப் பணி­கள் நிரப்பப்­ப­டாமல் காலி­யாக உள்­ளது.பணி­யில் உள்ள 60,000 அரசு ஊழி­யர்­க ­ளுக்­கும் நாளொன்றுக்கு ரூ.300ம் என்ற வீதமே வரு­மா­னம் உள்­ளது. கடந்த 15 ஆண்­டு­க­ளாக அவர்­கள் சிர­மப்­பட்டுவரு­கின்­ற­னர். இருப்­பி­னும் பல­ருக்கு பணி உறுதி செய்­யப்­ப­டா­மல் ஒப்பந்த அடிப்­ப­டை­யி­லேயே பணி­யாற்றி வரு­கின்­ற­னர்.விவ­சா­யம்,மருத்­து­வம், என அனைத்­தும் தனி­யா­ருக்கு தாரை வார்க்­கப்­பட்டுள்­ளது என்று குற்றம் சாட்­டி­யுள்­ளார்.