பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருவதை தமிழக அரசும் காவல் துறையும் கட்டுப்படுத்த வேண்டும்!. மகளிர் விடுதலைப் பேரமைப்புக் கோரிக்கை!!.

கும்பகோணம்.
மார்ச்சு 14-2026 சனிக்கிழமை.

விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் மகளிர் விடுதலைப் பேரமைப்பு தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் மகளிர் விடுதலைப் பேரமைப்பு மாநிலத் தலைவர் வெண்ணிலா சேகர் தலைமையிலும், மாநிலச் செயலாளர் கு.ரோஸ்லின் முன்னிலையில் நடைபெற்றது.தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் இரா.ஜோஸ்பின் வரவேற்றார். தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் வி.பூம்பாவை நன்றி கூரினார். இக்கூட்டத்தில் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் மதுபாலா,குடந்தை மாநகர் மாவட்ட செயலாளர் பிரஷ்டிகா அய்யப்பன்,விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி திருப்பனந்தாள் வடக்கு ஒன்றியச் செயலாளர் மீனாட்சி மகேந்திரன், மகளிர் விடுதலைப் பேரமைப்பு குடந்தை மேற்கு ஒன்றிய செயலாளர் ரேணுகா,தெற்கு ஒன்றியச் செயலாளர் ரேவதி சந்திரன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் பிரியா ஜெயக்குமார், திருப்பனந்தாள் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெபராணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், துணைப் பொதுச்செயலாளர் ரமீளா தமிழ்மாறன், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பி.விஜய ஆனந்த் மற்றும் சமூகச் சமத்துவ முற்போக்கு மாணவர் பேரவை மாநில செயலாளர் ரியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழிகாட்டி உரையாற்றினர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

# தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தொடர்கிறது., மது,கஞ்சா போன்ற போதை கலாச்சாரத்தால் மிகக் கடுமையாக இளைஞர்களும் சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்,பெண்களுக்கு எதிரான கொடுங்குற்றங்கள் இழைக்கப்படுகின்றன. இதை உடனடியாக தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசும் காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

# பாலியல் ரீதியான கொடுமையான நிகழ்வுகள் பச்சிளம் குழந்தைகள் முதல் நாளை சாவ இருக்கிற கிழவிகள் வரை காம வெறியர்களால் துன்புறுத்தி வல்லுறவு கொள்வதும் கொலை செய்வது என்கிற செய்தி ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருக்கிறது. பள்ளிக்குச் சென்ற மாணவி பாலியல் கொடுமை ஆளாக்கப்பட்டு முள்முட்புதரில் தூக்கி வீசிவிட்டு சென்ற செய்தியும் கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. பிள்ளைகளை வளர்க்கும் போது அன்பு பாராட்டியும் மற்றவர்களை மதிக்கக்கூடிய அடுத்த வருடையத் துன்பத்தை எண்ணிப் பார்க்கக் கூடியவர்களாகவும் வளர்க்க வேண்டும் என்றும், இது போன்ற குற்றச்செயலில் ஈடுபடக்கூடிய காம வெறியர்கள் தப்பவிடாமல் கடும் தண்டனை வழங்கி உறுதி செய்ய வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

# எதிர்வரும் 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் மகளிர் விடுதலைப் பேரமைப்பின் தாய் இயக்கமாக இருக்கக்கூடிய விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி முன்னெடுக்கும் அரசியல் முடிவை ஆதரித்து தேர்தல் களப்பணி ஆற்றுவது. 2026 இல்

# சட்டமன்றத்திற்கு விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சிப் பிரதிநிதியை அனுப்பி வைக்க களப்பணி ஆற்றுவது அதற்காக பரப்புரைப் பயணம், பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

# மகளிர் விடுதலைப் பேரமைப்பை பலப்படுத்தும் வகையில் அதிகமான அளவில் பெண்களை உறுப்பினர்களாக சேர்ப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.