சேரன்மகாதேவியில் நெல்லை புறநகர் மாவட்ட கழக அலுவலகம் திறப்பு

சேரன்மகாதேவியில் நெல்லை புறநகர் மாவட்ட கழக அலுவலகம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி மெயின் ரோட்டில் K.K.T எடைமேடை அருகில் நெல்லை புறநகர் மாவட்ட கழக அலுவலகம் இன்று (13.03.2026) வெள்ளிக்கிழமை மகாகணபதி ஹோமத்துடன் சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை புறநகர் மாவட்ட கழக செயலாளர், அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், கழக அமைப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் டாக்டர் இசக்கி சுப்பையா M.A., M.L., Ph.D. அவர்கள் தலைமையில் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் டாக்டர் மீனாட்சி சுப்பையா B.S.M.S. அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கழகத்தினர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

புதிய அலுவலகம் தொடங்கப்பட்டதன் மூலம் கழகத்தின் அமைப்பு பணிகள் மேலும் வலுப்பெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.