தலைவனை தேடி தாய்கழகத்தில் இணைந்தார் சிவலிங்கமுத்து

தலைவனை தேடி தாய்கழகத்தில் இணைந்தார் சிவலிங்கமுத்து
திருநெல்வேலி:
முன்னாள் அரசு வழக்கறிஞரும், ஓபிஎஸ் அணியின் திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக செயலாளருமான சிவலிங்கமுத்து அவர்கள் இன்று தாய்கழகத்தில் இணைந்தார்.
அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக செயலாளருமான டாக்டர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. அவர்கள் முன்னிலையில் அவர் தாய்கழகத்தில் இணைந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் ஏ.கே. சீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மைக்கேல் ராயப்பன், ரெட்டியார்பட்டி நாராயணன், அம்பாசமுத்திரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பிராங்கிளின் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.