பாளை மத்திய சிறை முன்பு Y வடிவில் மேம்பாலம் அமைக்க எஸ். டி. பி. ஐ, கட்சி வலியுறுத்தல்.

பாளை மத்திய சிறை முன்பு Y வடிவில் மேம்பாலம் அமைக்க எஸ். டி. பி. ஐ, கட்சி வலியுறுத்தல்.

17.02.26 SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர்மஸ்தான் தலைமையில் நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளர் வரவேற்று பேசினார் மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் செயற்குழு உறுப்பினர்கள் எழுத்தாளர் ரியாஸ் அகமது, பேட்டை இஸ்மாயில், ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
நிகழ்வில் மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் மும்தாஜ் ஆலிமா மகளிரணி மாவட்ட செயலாளர் முத்துலட்சுமி
(SDTU) தொழிற்சங்க செயலாளர் சுல்தான் பாதுஷா,
மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் போத்தீஸ் பாபு, சமூக ஊடக அணி மாவட்ட செயலாளர் அசாருதீன், நெல்லை தொகுதி தலைவர் சேக் இஸ்மாயில், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் பொறியாளர் இம்ரான் நன்றியுரையாற்றினார். கூட்டத்தில் பாளையிலிருந்து, புதிய பேருந்து நிலையம், மேலப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் குலவணிகர்புரம் ரோடு, ரயில்வே கேட் மூடும் வேலையில் போக்குவரத்து நிறுத்தம் ஏற்படும்போது பள்ளி கல்லூரிகள் நிறுவனங்களுக்கு செல்லும் வேலையிலும், திரும்பும் வேலையிலும், குறிப்பாக பாளை அரசு மருத்துவமனைக்கு செல்லும் அவசர ஊர்தி செல்ல முடியாமல் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. போக்குவரத்து சீராக அமைய மத்திய சிறை முன்பு ரயில்வே கேட் மேம்பாலம் Y வடிவில் அமைத்திட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், நகர்புற பகுதி முழுவதும் குண்டும் குழியுமான சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி
நெல்லை மாநகர் மாவட்டம்