2025 பொங்கல் பண்டிகையை ஒட்டி வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!!

சென்னை: 2025 பொங்கல் பண்டிகை ஒட்டி வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பெற்றுள்ளது இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் 2025 பொங்கல் பண்டிகை என்பது இலவச வேட்டி சேலை பயனளிக்கு வழங்குவதுடன் முதியோர் ஓய்வு திட்ட பயனாளிகளுக்கும் வழங்கவும் நெசவாளருக்கு தொடர் வேலை வாய்ப்பு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது இதன்படி 1 கோடியே 77 லட்சத்து 64,476 சேலைகள், 1 கோடியே 77 லட்சத்து 22,995 வேட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன தரம் பரிசோதித்து தேவை பட்டியல் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கு 100 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு கூடுதலாக தேவைப்படும் தொகையை மீண்டும் வழங்கப்படும் பேட்டி சேலைகள் பயனாளிக்கு கிடைப்பதை உறுதி செய்ய விரல் ரேகை பதிவை கட்டாயமாக வேண்டும் பொது மக்களுக்கு வேட்டி சேலை வழங்கும் நடைமுறையை கண்காணிக்க வருவாய் துறை முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது பண்டிகையின் போது அனுப்பி வைக்கப்பட்டு இருப்பில் உள்ள வேஷ்டி சேலைகள் நுகர் பொருள் வாணிப கழக்கத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது