நிலக்கோட்டை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூமார்கெட்டில் தினமும் திண்டுக்கல் மதுரை,தேனிமாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வயலில் உற்பத்தி செய்யப்படும் பூக்களை நேரடியாகவிற்பனை செய்து வருகின்றனர்,இதனால் கேரளா,ஆந்திரா கர்நாடகா சென்னை பாண்டிச்சேரி மற்றும் மலேசியா சிங்கப்பூர் கனடா உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 10-டன்முதல் 15-டன் வரை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது, அதே போல இம்மார் கெட்டில் திருவிழா திருமணம் காதணிவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் பல்வேறு மாடல்களில் விதவிதமான மாலைகள் கட்டிவிற்பனை செய்வது வழக்கம்.இந்நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள கீழவண்ணான் வினை என்றகிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு வன்னியடி மரச்சாமிகோவில் ஆவணி மாதம் கொடைத் திருவிழாவ முன்னிட்டு அதன்பரிவார தெய்வங்களான பிரம்மசக்தி அம்மன் சுடலைமாடசாமி இசக்கி அம்மன்ஆகிய தெய்வங்களுக்கும் சேர்த்து பச்சை ஏலக்காய் உள்ளிட்டபதப்படுத்தப்பட்ட உலர்கருப்பு திராட்சை முந்திரி பாதாம் பிஸ்த்தா மற்றும் அலங்கார பொருட்கள் மூலம் 10 நாட்களாக மாலை தயாரிப்பு வல்லுனர்களான மல்லையாபுரம் முருகன் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் சுமார் 120-பணியாளர்கள் விரத மிருந்து ரூபாய் 4 லட்சம் மதிப்பில் 8 அடி உயரத்தில் 2 மாலைகளும் 5 அடிஉயரத்தில் ஒரு மாலையும் என மூன்று இராட்சத பிரம்மாண்ட மலைகள் தயார்செய்துள்ளனர்,இம்மாலைகள் நேற்று லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது இன்று நடைபெறும் கொடை திருவிழாவில் ஐயன் சுடலைமாடன் எனப்படும் வன்னியடி மரச்சாமிக்குசாத்தப்படுகிறது, என்றுதகவல் வெளியாகியுள்ளது.மேலும் இது குறித்து மாலை தயாரிப்பு வல்லுனர்கள் முருகன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் கூறியதாவது நாகர்கோவில் சரக்கல்வினைஅருள்மிகு பிரம்மசக்தி அம்மனும் சுடலை மாடசுவாமியுடன் இசக்கி அம்மனும் கூடிய வன்னியடிமரச்சுவாமி திருக்கோவிலுக்கு பக்தர்கள் வித்தியாசமான மாலை செய்ய வேண்டி கீழவண்ணான் விளை என்ற கிராமத்தில் குலசாமிக்குபடைப்பதற்காக சத்தியசீலன், சத்தியரூபன் ஆகிய2 -பக்தர்கள் இது போன்ற மாலை வேண்டுமென்றுஆர்டர் கொடுத்தார்கள்.அதன் பேரில் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பில் கடந்த 10 நாட்களாக 120பணியாளர்கள் கொண்டகுழு விரதமிருந்து இந்தமாலையை தயார் செய்துள்ளோம் இது போன்றுபல்வேறு வகையில் சிறப்பாகசெய்து தர முன்பதிவுச ெய்தால் செய்துதருவோம் என தெரிவித்தார்.மேலும் நிலக்கோட்டைபூ மார்க்கெட்டில் இவ்வளவு பெரிய பிரம்மா ண்டமான மாலையை பார்த்து விவசாயிகளும்பொதுமக்களும் ஆச்சர்யத்தோடு பார்த்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






