சேரன்மகாதேவி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு 17.01.2026 அன்று முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இந்நிகழ்வில் 200 முன்னாள் மாணவர்கள் மற்றும் 23 முன்னாள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக கல்லூரியின் இயக்குனர் திரு வெளியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார், இந்த கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறை தலைவர் திரு. கட்டளை கைலாசம், தலைமை ஆசிரியர் பெருமாள், கல்லூரியில் முன்னாள் முதல்வர் வல்சக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். பஞ்சாயத்து தலைவர் ஜெரால்டு மாணிக்கராஜ், கோயில் பிள்ளை, பாண்டியன், திரவிய மோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். வணிகவியல் பேராசிரியர் தெய்வநாயகம் வரவேற்புறை ஆற்றினார். கல்லூரி முதல்வர் கி.சகாயராஜ் தலைமையுறை ஆற்றினார். பேராசிரியை கிருஷ்ணவானி நன்றி உரையாற்றினார். பேராசிரியர் அலெக்ஸ் ஆண்டனி ராஜ் மற்றும் கிருஷ்ணவாணி ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினர். இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்கம் ஒன்று நிறுவப்பட்டு தலைவராக முதல்வர் கி. சகாயராஜ், துணைத்தலைவராக ஜி. ஆனந்த், செயலாளராக டாக்டர் கே.நிலா, துணை செயலாளராக ரா.சர்மா, பொருளாளராக விசுவாசம் மேரி, துணைப் பொருளாளராக மகாலிங்கம் மற்றும் ஏழு உறுப்பினர்கள் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளுடன் வருகை தந்து சிறப்பு செய்தனர். இந்நிகழ்ச்சியின் நினைவாக இந்நாள் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது
சேரன்மகாதேவி மனோ கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு






