சேரன்மகாதேவி நீதிமன்ற வளாகத்தில் சமத்துவ பொங்கல் – விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

சேரன்மகாதேவி நீதிமன்ற வளாகத்தில் சமத்துவ பொங்கல் – விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

சேரன்மகாதேவி.
சேரன்மகாதேவி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சங்கத் தலைவர் செல்வகுமார், மாதவன் ஆகியோர் தலைமை தாங்கினார், செயலாளர் சந்தனகுமார் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக சங்க பொருளாளர் பாக்கியராஜ் வரவேற்புரை வழங்கினார். விழாவின் நோக்கமும், சமத்துவத்தின் முக்கியத்துவமும் குறித்து எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் சங்கத்தின் துணைத் தலைவர் ஆறுமுகம், நூலகர் கார்த்திகா, செயற்குழு உறுப்பினர்களான ஜோதி, அமுதா, இசக்கிமுத்து, அந்தோணி சேவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் மூத்த வழக்கறிஞர்களான ராமகிருஷ்ணன், மதியழகன், மாரிமுத்து, பாண்டியன், குத்தாலிங்கம், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

விழாவின் இளம் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சகோதரிகள், மற்றும் காவல்துறையை சார்ந்தவர்கள் ஒரு பகுதியாக விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறுவர்களுக்கான மியூசிக் சேர், பாட்டில் தண்ணீர் நிரப்பும் போட்டி, முறுக்கு கடித்தல், பலூன் உடைத்தல், ஸ்லோ பைக் ரேஸ், பெண்களுக்கான கோலம் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விழாவின் இறுதியில் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகளை நீதித்துறை நடுவர் அருண் சங்கர் அவர்கள் வழங்கி, விளையாட்டின் மூலம் ஒற்றுமையும் சமத்துவமும் வளர வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவில் ஏராளமான வழக்கறிஞர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இறுதியாக நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.