ஆறுகள், நீர்த்தேக்கங்கள் அபாய கட்டத்தை எட்டியது குஜராத்தில் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை இந்த பருவமழையால் இதுவரை 99 பேர் பலி

காந்திநகர்: ஆக.28 குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகள்,நீர்த்தேக்கங்கள் அபாய நிலையை எட்டியுள்ளது.இந்த பருவ மழையால் இதுவரை 99 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் கடந்த சில நாட்களாக பலத்தமழை பெய்து வருவதால்,தாழ்வான பகுதிகள் நீரில்மூழ்கி வெள்ளம் சூழ்ந்துள்ளது.நூற்றுக்கணக்கான மக்கள்பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.நாளை காலை வரை மாநிலத்தின்பல மாவட்டங்களில் கனமழைமுதல் மிக கனமழை பெய்யும் என்றும், சில இடங்களில் மிகமிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம்எச்சரிக்கை விடுத்துள்ளது.அதனால் மாநிலத்தின்அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 3பேர் உயிரிழந்துள்ளனர்; 7 பேர்நீரில் மூழ்கி மாயமாகினர்.அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பராஜ் ஆற்றில்தண்ணீர் பெருக்கெடுத்துஓடுவதால், தேசிய நெடுஞ்சாலை 56ல் உள்ள பாலம் சேதமடைந்து வாகனபோக்குவரத்து பாதிக்கப்பட்டது.வதோதரா, ஆனந்த், கேடாமற்றும் பஞ்சமஹால் மாவட்டங்களில் பலத்த மழைபெய்துள்ளது. இதுகுறித்து குஜராத் பேரிடர் நிவாரண ஆணையர் அலோக் குமார்பாண்டே கூறுகையில், ‘கடந்த24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில்3 பேர் இறந்துள்ளனர்;இந்த பருவமழையால்இதுவரை மொத்தம் 99பேர் இறந்துள்ளனர்.13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கைவி டு க் க ப் பட் டுள்ளது ’என்று கூறினார். இன்றும்,
நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால், அனைத்து கலெக்டர்களும் தங்கள்ஊழியர்களின் விடுமுறையை
ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.. தேசிய, மாநிலபேரிடர் குழு மற்றும் கடலோர காவல்படையின் உதவியுடன் இதுவரை 1,653பேர் மீட்கப்பட்டுள்ளனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 17,800 பேர்
பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 13 தேசிய
பேரிடர் குழுவும், 22 மாநிலபேரிடர் குழுவும் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றன.நேற்று காலை 6 மணி
வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், 33 மாவட்டங்களில் மழை பதிவாகியுள்ளது.அதிகபட்சமாக நவ்சாரி
மாவட்டத்தின் கேர்கிராமத்தில் 356 மிமீமழையும் பதிவாகியுள்ளது.குஜராத்தில் இந்த ஆண்டு 91.88 சதவீதத்துக்கும் அதிகமாகமழை பெய்துள்ளதாகவும்,மாநிலத்தில் உள்ள 206 நீர்த்தேக்கங்களில் 59 நீர்த்தேக்கங்கள் 100 சதவீதம்
நிரம்பியுள்ளதாகவும், 72நீர்த்தேக்கங்கள் உஷார் நிலையில்வைக்கப்பட்டுள்ளதாகவும்,ஒன்பதுநீர்த்தேக்கங்களுக்கு
வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏழு ஆறுகள் நிரம்பிவழிகின்றன. மழை காரணமாககுஜராத் முழுவதும் 7,009கிராமங்களில் மின்சார சேவைபாதிக்கப்பட்டுள்ளதாகஅதிகாரிகள் கூறினர்.