நாகர்கோவில் நாகராஜா கோயில் தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மீட்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோயில் தெப்பக்குளத்தில் நேற்று காலை 6 மணியளவில் அழுகிய நிலையில் 45ல் இருந்து 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மிதந்தது. உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. இதையடுத்து உடனடியாக கோயில் நடை சாத்தப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து சடலத்ைத மீட்டனர்.

அவர் இறந்து 2 நாட்கள் வரை ஆகி இருக்கலாம் என கூறப்படுகிறது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. சடலம் மீட்கபட்டதால் நடை சாத்தப்பட்டது.பின், கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு பரிகார பூஜைகள் நடந்து நடை மீண்டும் திறக்கப்பட்டது.