கலைஞர் கருணாநிதி 102 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை திமுக தெற்கு மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் கலைஞர் கருணாநிதி 102 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேற்கு பகுதி கழகச் செயலாளர் போஸ் ஈஸ்வரன் தலைமை தாங்கினார்.

மேற்கு பகுதி வட்ட கழகச் செயலாளர் குட்டி என்ற ராஜரத்தினம் பாலா என்ற பாலசுப்பிரமணியன் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் மற்றும் திமுக மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கிருத்திகாதங்கபாண்டி ஆகியோர் சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.மேற்கு பகுதி வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அழகுமலை 100வது வட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வில்வ மணிகண்டன் ஆகியோர் நன்றியுரை கூறினர்