குமரி மாவட்ட நிர்வாகமே! தீண்டாமை சுவரை அகற்று!! போராட்டத்தை தூண்டாதே!!!

குமரி மாவட்ட நிர்வாகமே..!
தீண்டாமை சுவரை அகற்று..!!
போராட்டத்தை தூண்டாதே…!!!

கன்னியாகுமரி மாவட்டம்
அகஸ்தீஸ்வரம் தாலுகா, மயிலாடி வருவாய் கிராமம் – அழகப்பபுரம் பகுதியை சார்ந்தவர் செல்வி.
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த மூன்று வீடுகள் உள்ளன. அதில்
இவருக்கு சொந்தமான ஐந்து சென்ட் மனையில் சுமார் 40-ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அப்பகுதியை சார்ந்த மாற்று சமூகத்தை சார்ந்த சிலர் சாதியவாத குரோதத்தை ஏற்படுத்தியும், தாங்களது அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தியும் அரசுக்கு சொந்தமான 85-சென்ட் (சர்வே எண் 460/27) பொதுபாதையில்
தீணாடாமை தடுப்புச்சுவரை கட்டி
போக்குவரத்து இடையூறாகவும்,
குடிநீர் இணைப்பினை (இணைப்பு எண்: 199) துண்டித்தும், வீட்டிற்குள் குடிநீர் வராமல் தடுத்து வைத்துள்ளனர்கள்.
சம்மந்தப்பட்ட அழகப்பபுரம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை சொல்லியும் எவ்வித நடிவடிக்கைகளும் எடுக்கவில்லை. அன்றாட தேவைக்கான அடிப்படை உரிமையும் கூட சாதியமனநோயாளிகளால் பறிக்கப்பட்டுள்ளது.

மேலும்,
கடந்த 03-08-2025 அன்று நள்ளிரவு 1.30 மணியளவில் சுமார் 40-அடியாட்களுடன் பாதிக்கப்பட்ட நபர்களின் வீட்டின் முன்பாக பொதுபாதையில் நடமாட முடியாத வகையில் சுவர் கட்டி அடைத்துள்ளனர்கள்.
இதனால் பெரிதும் அவதிபட்டு
மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்கள்.

மேற்குறிய சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றும்
இதுவரை மாவட்டநிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அடிப்படை உரிமையும்
வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டு
பாதிக்கப்பட்ட மக்களின் விடுதலை குரலாக விசிக சார்பில் இன்று (15-12-25) மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் அவர்களுடன் புகார்மனு அளிக்கப்பட்டது.

மாவட்டநிர்வாகம் காலம் தாழ்த்தினால் நீதிமன்றத்தை நாடி உரிமையை வென்றேடுப்போம்.

இவண்;

சு.கோபிபேரறிவாளன்-விசிக.
மாவட்டசெயலாளர்
குமரி கி மாவட்டம்.