தருமபுரி மாவட்டம் கோம்பை கிராமத்தில் நீர் தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக காட்சி பொருளாக இருந்துவருகிறது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அரக்காசன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட

நாகாவதிஅணை அருகே ஆஞ்சநேயர்கோயில் கோம்பை கிராமம்உள்ளது.இக்கிராமத்தில்

சுமார்200க்கும் மேற்பட்டகுடும்பத்தினர்வாசித்துவருகின்றனர்.இந்தகிராமத்தில் பிரதான

தொழிலாக 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் சாகுபடி செய்து

வருகின்றனர். இந்த நிலையில் கிராமத்திற்கு அடிப்படை தேவைகளான சாலை வசதி,

குடிநீர்வசதிஏதுமின்றி பலஆண்டுகளாக அவதிக்குள்ளாகிவருகின்றனர். தாங்கள்விவசாய

நிலங்களில் விளையும் விலை பொருட்களை சந்தைப்படுத்த எடுத்துச் செல்வதற்கு தார்

சாலை இன்றிஅவதிக்குள்ளாகி வருகின்றனர். தங்கள்கிராமத்தில் உள்ளவர்களே வீட்டிற்கு

வீடு பணம் வசூல் செய்து மண் சாலை அமைத்து உள்ளனர். குடிநீருக்காக மாவட்ட

நிர்வாகத்தால் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக

காட்சி பொருளாக இருந்துவருகிறது.இங்குள்ள பொதுமக்கள்குடிநீருக்காக அருகில் உள்ள

விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருவதால் அவ்வப்போது வைரஸ்

காய்ச்சலுக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவமனை சென்று மருத்துவம் பார்க்கும் அவல நிலை

உள்ளது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக

மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல உரிய நேரத்தில் அவசர ஊர்த்தி வர முடியாததால்

இருசக்கர வாகனத்திலோஅல்லது தோள்மீதோ எடுத்துச் செல்லும் நிலை உள்ளது.