சென்னை: சென்னையில் திமுக முன்னாள் எம்எல்ஏ., உறுப்பினர் அட்டையை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுகவை சேர்ந்த திருத்துறைப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ ஆடலரசன் இன்று திமுக தலைமையகமான அறிவாலயத்திற்கு வந்தார் . அவர் , முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார் .
அங்கிருந்த காவலர்கள் அனுமதிமறுத்ததால், தனது உறுப்பினர் அட்டையை துாக்கி வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது . கோபமடைந்தமுன்னாள் எம்எல்ஏ ஆடலரசன் , நான் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால்
அனுமதிக்க மறுக்கிறீர்களா என்று ஆவேசம் அடைந்தார் .
இந்த தகவல் அப்பகுதியில் பரவியநிலையில் , பின்னர் , ஆடலரசன் , முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் .






