பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் அம்பை சட்டமன்ற தொகுதி சேரன்மகாதேவி தாலுகா சேரன்மகா தேவியில் பாபா சாகிப் திருஉருவப்படத்திற்கு டிசம்பர் 6 சனிக்கிழமை 2025 அன்று புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது .
கட்சியின் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில் ,மாவட்ட செயலாளர் தணேஷ் செல்வன், பொருளாளர் சிவராஜ், அம்பை சட்டமன்ற தலைவர் எ. ராம்குமார், திருநெல்வேலி சட்டமன்ற செயலாளர் பேராசிரியர் நயினார் ,செல்வநாதன், சுரேஷ், ரவீந்திரன் ஆகியோர் முன்னிலையில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது .
வருகின்ற 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.
மாவட்டத் தலைவரின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற நிர்வாகிகள் கட்சி பிரமுகர்கள் கூடி ஆலோசனை செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திருநெல்வேலி பாளையங்கோட்டை ராதாபுரம் நாங்குநேரி அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது என தலைமையின் ஒப்புதலுடன் மாவட்ட தலைவரின் பரிந்துரையின்படி தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே அனைத்து கட்சி பிரமுகர்களும் அனைவருக்கும் ஒத்துழைப்பு கொடுக்கும் படியும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.






