கல்லிடை,ஆக.26 நெல்லை புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி 2024-2027 வருடத்திற்கான எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய தொகுதி நிர்வாகிகள் தேர்தல், முன்னாள் தொகுதி தலைவர் செய்யது இப்ராஹிம் தலைமையில் நேற்று 25/08/2024 மாலை 5.00 மணிக்கு பத்தமடையில் வைத்து நடைபெற்றது.
எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் எம்.கே பீர்மஸ்தான்,மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகம்மது ஷஃபி, மாவட்ட வர்த்தகரணி தலைவர் அம்பை ஜலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேர்தல் அதிகாரியாக நெல்லை புறநகர் மாவட்ட துணைதலைவர் முல்லை மஜீத் கலந்து கொண்டு தேர்தலை ஜனநாயக முறையில் வாக்குச்சீட்டின் அடிப்படையில் தேர்தலை நடத்தினார்.
மாவட்ட அமைப்பு பொது செயலாளர் பத்தமடை சிராஜ் அவர்கள் தலைமைத்துவம் குறித்து பேசினார். புதிய தொகுதி நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றதில் புதிய தொகுதி தலைவராக கல்லிடை கலீல் ரஹ்மான், துணை தலைவர்களாக சேரை சுரேஷ், பத்தமடை ஷரிஃப், செயலாளராக அகமது ரஃபீக்,இணைச்செயலாளர்களாக வீரை ஷாஜகான் மைதீன், பீர் முகம்மது(எ) ரஃபீக்,பொருளாளராக செய்யது இப்ராஹிம், செயற்குழு உறுப்பினர்களாக அபுபக்கர், அசன்காதர், சிந்தாகொடி மாவட்டபொதுக்குழு உறுப்பினர்களாக சிங்கை ஷேக் அலி, கல்லிடை
ராஜா அப்துல் ஹமீது ஆகியோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.சமகால அரசியல் சூழலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அம்பை தொகுதி நிர்வாகிகள் புது உத்வேகத்துடன், தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்
எஸ்.டி.பி.ஐ கட்சியின் அம்பை சட்டமன்ற தொகுதி புதிய நிர்வாகிகள் தேர்வு:






