புவனகிரி அருகே சாத்தமங்கலத்தில் போலி நகை கொடுத்து மோசடி
3.900 கிராம் போலி நகைக்கு ரூ. 28,800-யை பெற்று கம்பி நீட்டிய மர்மப் பெண் குறித்து போலீசார் தீவிர தேடுதல் மற்றும் விசாரணை
க
டலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாத்தமங்கலம் கிராமத்தில் குஷால் பேங்கர்ஸ் என்ற வட்டிக்கடை இருந்து வருகிறது. இந்த வட்டி கடைக்கு 01-12-2025 அன்று வந்த சிவப்பு புடவை கட்டிய பெண்மணி ஒருவர் தனது கையில் இருந்த ரவுண்ட் ரிங்(3.900மி.கிராம்) தங்க நகை வலையத்தை கொடுத்து, நகையை அடமானம் வைத்து ரூ. 28,800 ரூபாய்க்கு அடமானம் வைத்து பணத்தைப் பெற்றார். பணத்தைப் பெற்று சத்தம் போடாமல் அந்தப் பெண் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். இந்நிலையில் அவர் சென்ற பின்பு கடையின் உரிமையாளர் நகையின் மீது சந்தேகம் அடைந்து அதனை மீண்டும் மிக நுணுக்கமாக பரிசோதனை செய்து பார்த்தபோது அது போலி நகை என்பது தெரியவந்தது. இந்நிலையில் இதுகுறித்து அதிர்ந்த அவர் அதிர்ச்சி அடைந்து காவல்துறையில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் பெண்மணி கொடுத்த அருகில் உள்ள பரதூர் கிராமத்தைச் சேர்ந்த முகவரிக்கு சென்று தேடிய போது அது போலியான முகவரி எனவும் தெரிய வந்தது. இந்நிலையில் இதுகுறித்து யாரும் ஏமாற வேண்டாம் என கடையின் உரிமையாளர் சமூக வலைதளங்களில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அந்த மர்மப் பெண் குறித்து தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






