கனமழை எதிரொலி.. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னையில் காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

சென்னை,தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் தாழ்வானபகுதிகளில் வசிப்போர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

அதேபோல, காலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்கள், வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது மழையால் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர்.இதனிடையே, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கனமழை மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.